பார்த்திபனை பி.ரிந்தது இதற்காக தான்! மன.ம் தி.றந்த நடிகை சீதா

காதல் திருமணம் செய்த பார்த்திபனை பிரித்தது குறித்து நடிகை சீதா விளக்கம்

கணவன் மனைவிக்குள் பரஸ்பர மரியாதை இருந்தால் விவாகரத்து இருக்காது – நடிகை சீதா

எதிர்பார்த்த அன்பு கிடைக்காததால் தான் நடிகர் பார்த்திபனை பிரிந்ததாக நடிகை சீதா தெரிவித்துள்ளார்.

ஆண்பாவம் படம் மூலம் அறிமுகமான சீதா, புதிய பாதை படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு பார்த்திபனும், சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த நட்சத்திர ஜோடி 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டது.

இந்த நிலையில் நடிகை சீதா அளித்த நேர்காணல் ஒன்றில் பார்த்திபனை பிரிந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘பார்த்திபன் தினமும் தொலைபேசியில் அழைத்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லிவிடுங்கள் என கேட்பார். ஒருநாள் பேசும்போது ஐ லவ் யூ என்று நான் சொன்னேன். திருமணம் முடித்த பின்னர் எதிர்பார்ப்புகள் இருந்தது.

என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால், கணவனிடம் இருந்து முழுதாக அன்பு கிடைக்க வேண்டும் என்பது தான். இது கூட இல்லை என்றால் பின் வாழ்க்கையில் என்ன தான் இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை இருக்க வேண்டும். கணவர் எந்த வேலை செய்தாலும் மனைவியை மதிக்க வேண்டும். அவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இருவருக்குள்ளும் மரியாதை என்பது இருக்க வேண்டும். மரியாதை கொடுத்து நடந்தால் எந்த துறையில் கணவன், மனைவி வேலை பார்த்தாலும் விவாகரத்து என்பது இருக்காது எனவும் தெரிவித்தார்

Shares