கொரோனா என்னும் கொடிய வைரஸ் இப்போது உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், இப்போது பல வகைகளில் உருமாறி, தீவிரமாக பரவி வருகிறது.
இது குறித்து பிலவி வருட பஞ்சாங்கத்தில் ஏற்கனவேபுதிய வகை வைரஸ்கள் மக்களை பாதிக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. அது போன்றே இப்போது இந்த கொரோனா வைரஸ் உருமாறி பலவித பெயர்களுடன் பரவி வருவது மட்டுமின்றி, கருப்பு, பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ண பூஞ்சைத் தொற்றுக்களும் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா பாதிப்பு வரும் 2023-ஆம் ஆண்டு வரை இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதாவது, ராகு பகவான் கால புருஷ தத்துவத்திற்கு 2-வது வீடான ரிஷப ராசியில் உள்ளது.
இது தன குடும்ப வாக்குஸ்தானம். பலருக்கும் வேலையிழப்பு, பண நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது. அதேபோல குரு தற்போது லாப ஸ்தானமான 11வது வீட்டில் கும்ப ராசியில் இருந்து வக்ரகதியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
அவர் அக்டோபர் மாதம் மகர ராசிக்கு சென்று மீண்டும் நேர்கதியில் கும்ப ராசிக்கு பயணிப்பார். 2022-ஆம் ஆண்டு குரு 12-வது வீடான மீன ராசிக்கு நுழைவார். அதே நேரத்தில் ராகு பகவான் தற்போது உள்ள ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார்.
அந்த கால கட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று கட்டுப்பட வாய்ப்புள்ளது. வேலை இழந்த பலருக்கும் புது வேலை கிடைக்கும். நிறைய பண வரவு கிடைத்து நிதி நெருக்கடிகள் நீங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், அதற்கு குருவின் சஞ்சாரம்தான் காரணம் என்று கூறுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் மாதத்தில் இருந்து உலகம் மற்றொரு சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குரு பகவான் அப்போது கும்ப ராசியில் நேர் கதியில் தனது பயணத்தை தொடங்குவார்.
குருவின் பயணம் படிப்படியாக கும்பம், மீனம் என கடந்த 2023-ஆம் ஆண்டு மேஷ ராசியில் பயணிக்கும் காலத்தில் ராகுவின் சஞ்சாரமும் மேஷ ராசியில் இருக்கும் போது கொரோனாவின் வீரியம் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறையும் என்று கணித்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் பாதிபை நாம் 2025-ஆம் ஆண்டு வரை சந்தித்து தான் ஆக வேண்டும், அதே சமயம் 2029-ஆம் ஆண்டு வரை இந்த கொரோனா பாதிப்பு நீடிக வாய்ப்புள்ளது, ஆனால் அதே சமயம் இந்தளவிற்கு அதன் பாதிப்பு இருக்காது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.