5 முறை திருமணம்.. 7வது.க்கு த.யாரான இளம்பெண் பெண்ணின் ஆசை.யால் நேர்ந்த விபரீதம்!!

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா (28). இவர் மின்துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய் சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் எனக்கு தெரியும் என்றும் என்னால் அரசு வேலை வாங்கிக்கொடுக்க முடியும் என்றும் ஏமாற்றி பலரிடம் பல லட்ச ரூபாயை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்களில் சிவகுமார் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும், வீட்டில் இருந்த சௌமியா வை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

திருச்சியை சேர்ந்த சவுமியா கணவன் இறந்துவிட்டதாக கூறியும், மறுமணம் செய்துகொள்ள நினைக்கிறன் எனக்கூறியும் கரூரில் வீடெடுத்து தங்கி வந்தார். அப்போது, அக்கம்பக்கத்தை சேர்ந்த பெண் ஓருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுநர் சிவகுமாரை சௌமியாக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

சௌமியாவும் அதற்கு சம்மதித்துள்ளார். இந்நிலையில், நான் தனியார் வங்கியில் மேனேஜராக உள்ளேன் தனக்கு அமைச்சரை தெரியும் எனக்கூறி சிவகுமாருக்கு அரசு வேலை வாங்கி கொடுப்பதாக சௌமியா ஆசையை கிளப்பியுள்ளார்.

மேலும், அதற்கு முன்பணமாக 10 ஆயிரத்தையும் சௌமியா பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து சிவகுமாருக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என பலரும் அரசு வேலைக்காக சௌமியாவிடம் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் முன்பணமாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று சௌமியாக்கும் சிவகுமாருக்கு திருமணம் நடத்தி முடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிவகுமாரை கரூருக்கு அழைத்து சென்ற சவுமியா அங்குள்ள ஒரு பெரிய பங்களா வீட்டை காட்டி அதுதான் தனது தாய் வீடும் என்றும், நான் காதல் திருமணம் செய்துகொண்டதால் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சிவகுமார் கரூரில் உள்ள உறவினருக்கு சௌமியாவின் புகைப்படத்தை அனுப்பி அவரை குறித்து விசாரிக்க சொல்லியுள்ளார். அப்போது, சௌமியாவுக்கும் அந்த பங்களா வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.

மேலும், அந்த வீட்டு உரிமையாளரையும் சௌமியா ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சௌமியாவை தூக்கி வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அது மட்டுமின்றி, சௌமியா ஏற்கனவே போலீஸ்காரர் உட்பட 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதோடு அடுத்த வாரம் சிவகுமாரையும் அதுக்கு அடுத்தபடியாக கோவையை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்ய ஸ்கெட்ச் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறக்காமல் இதையும் படியுங்க   நீயா நானாவில் அரங்கேறிய கறி விருந்து படையல்... ஒரே இலையில் சாப்பிட்ட கூட்டத்தை பாருங்க

தற்போது சௌமியா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கரூர் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சௌமியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *