திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு கணவன் ஒரு பெண் என கண்டுபிடித்த மனைவி!!

குஜராத்தில்..

குஜராத்தில் திருமணமான 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது கணவன் ஒரே ஆணே அல்ல; அவர் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்துள்ளார். ஆயிரம் பொய்களை கூறி திருமணம் செய்யலாம் என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம்.

மாப்பிள்ளைக்கு விரைவில் அரசுப் பணி கிடைத்துவிடும்; கல்யாணம் ஆனதும் பெண் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு சென்றுவிடுவார் என்பன போன்ற சிறு சிறு பொய்களை கூறி திருமணம் நடத்தியதையும் பார்த்திருப்போம்.

ஆனால், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, ஒரு பெண் தன்னை ஒரு ஆண் எனக் கூறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. அதுவும் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு அல்ல. மொத்தமாக 8 ஆண்டுகளாக அவர் தன்னை ஆண் எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் கோத்ரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவனை 2011-இல் நிகழ்ந்த ஒரு விபத்தில் இழந்துவிட்டார். கணவர் இறந்த பிறகு, தனது ஒரே மகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் மகள் தனியாக இருப்பதை பார்த்த அவரது பெற்றோர், அவருக்கு திருணமம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, மேட்ரிமோனியில் அவருக்கு வரன் தேடியுள்ளனர். இதில் விராஜ் வர்தன் என்பவர் அவருக்கு அறிமுகமானார்.

இருவரும் தொலைபேசியில் பேசிய பிறகு, திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. அப்போது அப்பெண்ணுக்கு வயது 32. இருவரும் திருமணம் முடித்த கையோடு காஷ்மீருக்கு தேனிலவுக்கும் சென்றனர்.

கணவர் இறந்ததோடு தனது வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணிய அப்பெண், புது வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீண்டநாட்களுக்கு நிலைக்கவில்லை. காஷ்மீருக்கு 10 நாள் தேனிலவு சென்ற அவர்கள் ஒருமுறை கூட உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து கேட்ட போது, உடல்நிலை சரியில்லை என ஏதேதோ சாக்குபோக்குகளை விராஜ் வர்தன் கூறியுள்ளார். அப்பெண்ணும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் தேனிலவு சென்று வந்து 6 மாதங்களாகியும் தனது மனைவியிடம் விராஜ் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், ஏன் தாம்பத்திய உறவில் ஈடுபட மறுக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு விரா்ஜ வர்தன், ரஷ்யாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும் போது ஒரு விபத்தில் சிக்கியதாகவும், அதனால் உடலுறவு வைத்துக் கொள்ளும் திறனை தான் இழந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டால் இது சரியாகிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதனால் இருவரும் பல வருடங்களாக உடலுறவு இல்லாமலேயே வாழ்க்கை நடத்தி இருக்கின்றனர். தனது வீட்டில் இது தெரிந்தால் கணவருக்கு அவமானமாகிவிடுமே என அப்பெண்ணும் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை. வெளிச்சத்துக்கு வந்த உண்மை இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொல்கத்தாவுக்கு சென்று குறிப்பிட்ட அறுவை சிகிச்சையை செய்துவிட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறி விராஜ் வர்தன் சென்றுள்ளார்.

பின்னர் ஒரு வாரம் கழித்து வீடு திரும்பிய அவர், மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டார். அப்போது அப்பெண்ணுக்கு நெருடலாக இருக்கவே சட்டென விளக்கை போட்டுள்ளார். இதில் தனது கணவர் விராஜ் வர்தன் ஆண் இல்லை; ஒரு பெண் என்பதும், செயற்கை ஆணுறுப்பு வைப்பதற்காக அவர் கொல்கத்தா சென்றதும் அவருக்கு தெரியவந்தது.

தான் 8 ஆண்டுளாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், உடனடியாக கோத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், இயற்கைக்கு மாறாக தன்னுடன் உறவு வைக்க விராஜ் முயற்சிப்பதாகவும், வெளியே கூறினால் கொலை செய்வேன் என மிரட்டியாகவும் அவர் போலீஸில் கூறினார்.

இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், விராஜ் வர்தனை கைது செய்தனர். விசாரணையில், தான் ஒரு பெண்ணாக இருந்த போதிலும் ஆண்கள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றும், பெண்கள் மீதே ஈர்ப்பு இருப்பதால் தான் ஆண் எனக் கூறி திருமணம் செய்ததாக போலீஸாரிடம் விராஜ் வாக்குமூலம் அளித்தார்.

Shares