ரவீந்தர் உன் பிளான் தெரியும், என்கிட்டே வெச்சிக்காத.. மீண்டும் பதிலடி கொடுத்த வனிதா!

ரவீந்தர் – மஹாலக்ஷ்மி திருமணம் பற்றி வனிதா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

வனிதா விஜயகுமார் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இடையே ஏற்பட்ட பிரச்சனை எல்லோரும் அறிந்தது தான். வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தபோது பீட்டரின் முதல் மனைவி பிரச்சனை செய்தார். அவருக்கு ஆதரவாக பேசி வனிதாவுடன் மோதினார் ரவீந்தர்.

தற்போது ரவீந்தர் சீரியல் நடிகை மஹாலட்சுமியை திருமணம் செய்ததற்கு கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தார். ‘கர்மா இஸ் எ B***H’ என வனிதா அதை பற்றி ட்விட் போட்டிருந்தார்.

அதற்கு பதில் சொன்ன ரவீந்தர் “என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை” என வனிதாவுக்கு பதிலடி கொடுத்தார்.

மீண்டும் பதில் அளித்த வனிதா

இந்நிலையில் வனிதா அளித்திருக்கும் பேட்டியில் ரவீந்தர் பற்றி பேசி இருக்கிறார். “எல்லாம் பிளான் பண்ணி, ஸ்டண்ட் create பண்ணி.. (என் திருமணத்தை) மொத்தமாக காலி பண்ணிடீங்க. Mind your own business என தான் நான் அவருக்கு அப்போதே அட்வைஸ் கூறினேன்.”

“அவருடன் சண்டை எல்லாம் இல்லை, அதன் பிறகு பேசி இருக்கிறேன். ரவீந்தர் உன்னுடைய மாஸ்டர் பிளான் என்னவென்று எனக்கு தெரியும், என்கிட்டே வெச்சிக்காத” என வனிதா கூறி இருக்கிறார்.

“நீங்க எதுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க. கமெண்டை எல்லை disable பண்ணிட்டு போய் வாழ்க்கையை பாருங்க. அந்த ட்விட்டை நான் பொதுவாக தான் போட்டேன்” என வனிதா மேலும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Shares