நண்பர்களாக இருந்தாலும் இந்த 3 ராசிக்காரங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கனுமாம்
இந்த வாரம் (ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 23 வரை) சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தேவதை துணையிருப்பார். சில ராசிகளுக்கு மத்திமமான பலன் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல் ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் இட மாற்றமும் சில ராசிக்காரர்களுக்கு கவலையை அதிகரிக்கும். அடுத்த 7 நாட்களுக்கு சிலர் தொழில் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லையே என்ற விரக்தி உணர்வுகள் ஏற்படலாம்.
சில நண்பர்கள்களின் ஆதரவு கிடைக்கும், ஆனால், யார் நண்பர்கள் என்று முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய நண்பர்களிடம் பணிச்சுமையை பற்றி விவாதிக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக இந்த வாரம் பணியிடத்திலும், வியாபார இடத்திலும் சற்று கவனமாக நடந்துக் கொள்வது நல்லது.

கடகம்
இந்த வாரம் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும், வேலையில் தொல்லை கொடுப்பவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சலும் ஏற்படும். நம்மிடம் தவறு இல்லை என்னும்போது, ஏன் பயப்படவேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
ஆனால், அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்றாலும், வாய்க்கு லகான் போடுவது என்றுமே நல்லது. சிலருக்கு தன்னம்பிக்கை குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்
மனஅமைதி இருக்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாலும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. அதுவும் குறிப்பாக தொழில் மற்றும் பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.
புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்றாலும் சக பணியாளர்களின் போட்டியும் பொறாமையும் சலிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தும், பேச்சில் நிதானமாக இருங்கள்.
வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் என்றாலும் அடக்கமாக இருப்பது அவசியம்.