சுகர் நோயாளி ஒரே ஒரு துண்டு இஞ்சி தின்னா என்ன நடக்கும்! தினமும் சாப்பிடலாமா..!

ஆயுர்வேதத்தில் இஞ்சி எதற்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல வலு கொடுக்கக் கூடிய ஒரு உணவுப் பொருள்தான் இஞ்சி.

இது ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி ஆக்சிடன்ட், ஆன்டி பங்கல், ஆன்டி கேன்கரஸ், ஆன்டி டியூமரஸ் என பல குண நலன்களைக் கொண்டதாகும். கல்லீரலுக்கு மிகுந்த மருந்து இந்த இஞ்சி. அது மட்டும்ல்ல இயற்கையான வலி நிவாரணியும் கூட.

இஞ்சியை காயவைத்தால் கிடைக்கும் சுக்கு ஆயுர்வேதத்தில் சுந்தி என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு ஆயுர்வேதத்தில் நிறைய முக்கியத்துவம் உண்டு. நீரிழிவு நோயயை குணப்படுத்தும் அரிய மருந்து இஞ்சி. இனி தினமும் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

அற்புதம் செய்யும் ஒரு துண்டு இஞ்சி

இயற்கையான வலி நிவாரணியாக இஞ்சி செயல்படுகிறது.

செரிமானப் பிரச்சினைகளை இஞ்சி சரி செய்கிறது.

வயிற்றில் அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது.

வாந்தி வருவதை தடுக்கவும் இஞ்சி கை கொடுக்கிறது.

நமது நரம்பில் வாந்தி வருவதைத் தூண்டும் செயலை தடுத்து அதை சரி செய்ய உதவுகிறது.

காய வைத்த இஞ்சி, ஏலம், பூண்டு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அதை கலவையாக்கி அதை சாப்பிட்டால் வயிற்றுப் புண் சரியாகும், வயிற்றில் பூச்சி இருந்தாலும் குணமாகும்.

தினசரி 2 மில்லி கிராம் இஞ்சி சாப்பிட்டு வந்தால் ஆல்கஹாலிக் அல்லாத கல்லீரல் வீக்க நோய் சரியாகும்.

மேலும் இன்சுலின் சுரப்பையும் இது கட்டுப்படுத்தும். இஞ்சியில் ஆல்பா லிபோயிக் ஆசிட் என்ற சிறப்புவேதிப் பொருளும் உள்ளது. இது வயோதிகத்தை தாமதப்படுத்தும்.

வயது சார்ந்த பிரச்சினைகளுக்கும் இது அருமருந்தாகும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் இறுக்கம், வலியைக் குறைக்கிறது.

வலியின் தன்மையை வெகுவாக மட்டுப்படுத்துகிறது. மாதவிடாய் வயிறு வலி குறைய இஞ்சி தேநீர் குடித்து வரலாம்.

ஆஸ்த்மா நோயாளுகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அவர்களுக்கு இஞ்சிச் சாறு அருமருந்தாகும்.

நுரையீரலில் இறுக்க நிலையை குறைத்து ஈஸியாக காற்று வந்து செல்ல இஞ்சி உதவுகிறது.

இது மிகச் சிறந்த டிபி எதிர்ப்பு மருந்தும் கூட. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குணம் காரணமாக டிபிக்கும் இது சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

தேங்காய் எண்ணெயில் இஞ்சி சாறைக் கலந்து, காது வலி உள்ளோருக்கு காதில் அதை ஊற்றி வர வலி குணமாகும்.

இஞ்சியை அரைத்து பேஸ்டாக்கி அதை பெருங்காயத்துடன் கலந்து தசைப் பிடிப்பு பிடித்த இடத்தில் தடவினால் அது சரியாகும்.

மேலும் வலியும் வெகுவாக குறையும்.

மறக்காமல் இதையும் படியுங்க   சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி

காய்ந்த இஞ்சியை நாட்டு சர்க்கரை, மிளகுடன் சேர்த்து பொடித்து பவுடராக்கி அதை சூடான நீரில் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares