10 நிமிடத்தில் சுவையான முருங்கைக்காய் கிரேவி ஓட்டல் சுவையில் செய்யலாம்!

மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைக்காய் கிரேவியை 10 நிமிடத்தில் தயார் செய்யலாம்.

அது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

தேவையான பொருட்கள்

 1. எண்ணெய் – 2 ஸ்பூன்
 2. கடுகு – அரை ஸ்பூன்
 3. வெந்தயம் – அரை ஸ்பூன்
 4. உளுந்து – கால் ஸ்பூன்
 5. சீரகம் – ஒரு ஸ்பூன்
 6. கருவேப்பிலை சிறிது
 7. 4 வெங்காயம் நறுக்கியது
 8. 10 முருங்கைக்காய்கள்
 9. மஞ்சள் – அரை ஸ்பூன்
 10. மல்லித்தூள் – அரை ஸ்பூன்
 11. மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
 12.   தேவையான அளவு தண்ணீர்
 13. உப்பு தேவையான அளவு
 14. கடலை மாவு – ஒரு சிறு கப்
 15. தேங்காய் பால் 200 மி.லி.
 16. கொத்தமல்லி இலைகள் கொஞ்சம்

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், கறிவேப் பிலையைப் போட வேண்டும்.

பின்னர், அதனுடன் வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

பின், முருங்கைக்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கலக்கவும்.

நீரும் உப்பும் சேர்த்து, முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விட வேண்டும். இறுதியாக கடலை மாவு, தேங்காய் பால் கலவையை கடாயில் கொட்டி கலக்க வேண்டும்.

கிரேவி கெட்டியாகும் வரை சமைத்து, கொத்தமல்லி இலையால் அலங்கரித்து பரிமாரவும்.

சுவையான ஆரோக்கியமான முருங்கைக்காய் கிரேவி தயார்.  

Shares