கேதுவின் மாற்றத்தால் ஏற்படும் அசுப பலன்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

ஜோதிடத்தின் பார்வையில், ராகு-கேது இரண்டும், பொதுவாக கெடு பலன்களை கொடுக்கும் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு-கேது பெயர்ச்சி ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

இதன் தாக்கம் குறிப்பட்ட ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை கொடுக்கிறது. ஒருவருக்கு ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் இருப்பது அந்த நபரின் வாழ்க்கை மிகவும் தொல்லைகள் நிறைந்ததாக வைத்திருக்கும்.

கேது கிரகம் தற்போது துலாம் ராசியில் அமர்ந்து இருக்கும் நிலையில், 2023 ஜனவரி வரை அந்த ராசியில் இருக்கும்.

இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். அவ்வாறு சிக்கித் தவிக்கும் ராசிகளை இங்கு பார்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் குடும்பத் தகராறு இருக்கும். இந்த நேரத்தில், குடும்ப உறுப்பினர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

காதல் உறவுகளில் விரிசல்கள் ஏற்படும். வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இல்லையென்றால் வாழ்வில் தோல்வியை சந்திக்க நேரிடும். வீட்டில் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும், கடன் சுமை கூடும்.

மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். சக ஊழியர்களிடையே, உங்கள் மீது எதிர்மறையான உணர்வு இருக்கும்.

வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்வீர்கள் ஆனால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், எந்த விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

மீன ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் நலம் மோசமடையலாம். இந்த நேரம் யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களை நிரூபிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

பணியிடத்தில் நஷ்டம் ஏற்படலாம். பேராசையைத் தவிர்த்து, இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீண்ட நாள் திட்டம் பிரச்சனைகளை கொடுக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   சனியின் பின்னோக்கிய பயணத்தால் கஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்! நீங்க என்ன ராசி?
Shares