நீண்ட நேரமாகியும் தலைமை ஆசிரியை பள்ளிக்கு வராத காரணத்தினால், அவரது வீட்டிற்கு சென்று பார்த்த ஆசிரியைகளுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள தங்கமணி திரையரங்கு அருகே வசித்து வருபவர் ரஞ்சிதம். இவர் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், ரஞ்சிதத்தின் மகள் வெளியூரில் வங்கி ஒன்றி பணிபுரிந்து வந்தாகவும், அவரது மகன் கோவை மருத்துவ கல்லூரியில் தங்கி படித்து வருவதாகவும் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
தலைமை ஆசிரியை என்பதால், பள்ளியில் உள்ள சாவிகள் அனைத்தும் ரஞ்சிதத்திடம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று பள்ளிக்கு ஆசிரியை வராததால் சக ஆசிரியர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர்.
ஆனால் பலமுறை போன் செய்தும் எடுக்காததால், நேரில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், பின்பக்க கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரஞ்சிதம் உயிரிழந்து கிடந்துள்ளார்.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், ரஞ்சிதம் கழுத்தில் கிடந்த நகை மற்றும் சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).