jaffna7news

no 1 tamil news site

News

1 லிட்டர் தேளின் விஷம் ரூ.80 கோடியாம்; வியக்க வைக்கும் தகவல்கள்..!

தேள் என்றால் விஷம், பயம், ஆபத்து என்றுதான் நாம் அறிந்திருக்கிறோம். நாம் பார்க்கும் எல்லா இடங்களிலும் பயங்கரமான உயிரினமாக பார்க்கப்படும் தேள் பணம் கொட்டும் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது.

ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்.

துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில் தான் இந்த பணி நடைபெற்று வருகிறது. ஒரு நாளுக்கு 2 கிராம் மட்டுமே நஞ்சு எடுக்கப்படுகிறது.

சினிமா மற்றும் மற்ற கலைகளில் தேள் என்றால் எதிர்மறையான மற்றும் பயங்கரமான ஒரு நச்சு உயிராக காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்தத் தேள் பணம் காய்க்கும் மரமாக பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்ததுண்டா.

ஆம் ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை 10 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் அது 80 கோடி ரூபாய் ஆகும்.

துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில் இந்த பணி நடைபெற்று வருகின்றது.

சராசரியாக ஒரு நாளுக்கு இரண்டு கிராம் மட்டுமே நஞ்சு எடுக்கப்படுகிறது.

தினம்தோறும் தேளை பெட்டியிலிருந்து எடுத்து அது ஒரு துளி நஞ்சை வெளியிடும் வரை காத்திருந்து அதனை ஆய்வாளர்கள் சேகரிக்கிறார்கள்.

ஒரு தேளை இடுக்கி போன்ற கருவியால் பிடித்துக்கொண்டு மற்றொரு கருவியால் அதன் கொடுக்கை அழுத்தி நஞ்சு சேகரிக்கப்படுகிறது.

பின்னர் அதனை உறைய வைத்து, அரைத்து பொடியாக்கி விற்பனை செய்கின்றனர்.

நோய் எதிர்ப்பு மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள்

வலி நிவாரணிகள் போன்றவற்றை உருவாக்க தேள் நஞ்சு பயன்படுகிறது. மூளைக்கட்டி (Brain Tumor) நோயை சரி செய்ய இது சிறந்த மருந்து என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தேள் பண்ணை உரிமையாளர் மெடின் ஓரன்லர் கூறுகையில்,

எங்களிடம் 20,000 அதிகமான தேள்கள் இருக்கின்றன. அவற்றுக்கு முறையாக உணவளித்து பராமரித்து வருவதன் மூலம் எங்களுக்கு நஞ்சு கிடைக்கிறது.

அதனை ஐரோப்பாவுக்கு விற்பனை செய்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மூளை கட்டி ( Brain Tumor) நோயை சரி செய்ய இது சிறந்த மருந்து என்று கூறலாம்.

ஒரு தேளில் இரண்டு மில்லி கிராம் நஞ்சு இருக்கின்றது. கிட்டத்தட்ட 300 முதல் 400 தேள்களில் இருந்து ஒரு கிராம் நஞ்சு கிடைக்கின்றது.

மத்திய, தென் அமெரிக்க பகுதியைச் சேர்ந்த தேள்களின் கொடுக்குகளில் இருந்து எடுக்கப்படும் மார்கடாக்சின் என்ற பொருள் மூலம், ரத்த நாளங்களில் புதிய ரத்த செல்கள் உருவாவதுடன் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைகளின்போதும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

5 செ.மீ முதல் 8 செ.மீ வரை வளரக்கூடிய இந்த வகை தேள்கள் மனிதர்களுக்கு உயிர் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares