ஜோதிடத்தின் பார்வையில், சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது.
ஜாதகத்தில் சூரியன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, ஆரோக்கியம், கௌரவம் மற்றும் புகழ் ஆகியவற்றை பாதிக்கிறது என்று நம்பப்படுகிறது.
எனவே, ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும் போது ஒருவருக்கு எதிர்மறையான விளைவு ஏற்படும்.
அப்படியாக பஞ்சாங்கத்தின் படி, செப்டம்பர் 17ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பிரவேசிப்பார். இதனால், சில ராசிக்காரர்களின் தலை விதி தலைகீழாய் மாறும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்:
சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு சிறப்பாக இருக்கும்.வாழ்வில் வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சி பொங்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தாயின் அன்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.
கடகம்:
சூரியன் பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். அதே சமயம் சில செலவுகளும் அதிகரிக்கும்.
குடும்ப சூழ்நிலை சிறப்பாக இருக்கும். எனினும், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டு உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
சிம்மம்: உங்களுக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும், இதனால், குடும்பத்தினர் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
வாழ்வில் புது ஒளி பிறக்கும். அதிக வேலை பளு இருக்கும். எனினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மாற்றம் ஏற்படலாம்.
கன்னி:
சூரியன் பெயர்ச்சியால், கன்னி ராசிக்கார்கள் சிறந்த பலனை பெறுவார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கௌரவம் உயரும். எஉங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள்.
பெற்றோர்களிடம் இருந்து நிதி உதவியைப் பெறுவீர்கள். எதிலும், நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).