ஐந்.தாவது திருமணம் செய்ய முயன்ற நபர் : அதிர.டியாக மண்டபத்திற்கு நுழைந்த ஏழு பிள்ளைகள் : பின்.னர் நடந்த சம்பவம்!!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55) என்ற நபருக்கு திருமணம் நடக்கவிருந்தது. திருமணத்திற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் 7 பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்துள்ளனர்.

மணமகனுக்கு இது ஐந்தாவது திருமணம் என்று தெரிவித்த அவர்கள், திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும் மணமகளின் தரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் அடிதடியாக மாறியது. மாப்பிள்ளை ஷாபிக்கு சரமாரியாக அடி விழுந்தது.

அதன் பின்னர் நடந்த விசாரணையில் தனது மனைவியிடம் இருந்து சில காலம் விலகி இருந்த ஷாபி அகமது, கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.

அப்போது தான் அவர் ஐந்தாவது திருமணம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் மணமகனின் பிள்ளைகள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், ஷாபி அகமது கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Shares