Article

அடடே தேவயானியின் மகள்களா இது?… வாயடைத்துப் போன ரசிகர்கள்! தேவயானியின் அழகிய குடும்ப புகைப்படங்களை பாருங்கள்..!

அதிகாலையில் சேவலை எழுப்பி அதைக் கூவென்று சொல்லுகிறேன். கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்…”என அஜித் தலயாக அறியப்படுவதற்கும் முந்தைய காதல் மன்னனின் காலம் அது. மொத்த வெட்கத்தையும் முகத்தில் சுமந்து அழகுதேவதையாக அதில் வலம் வருவார் தேவயானி.

அஜித்தின் ‘’தொடரும்’’ உள்பட பல படங்களில் நடித்தவர் தேவயானி. அதேபோல் விஜயுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ரம்பாவும், தேவயானியும் சகோதிரிகளாக விஜயுடன் நடித்த படத்தில் இடம்பெற்ற ‘’மல்லிகையே…மல்லிகையே…மாலையிடும் மன்னவர்யார் சொல்லு…”பாடல் பட்டிதொட்டியெல்லாம் அன்று ஹிட் அடித்தது.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த தேவயானி கடந்த 2001ம் ஆண்டு தன்னை வைத்து படம் இயக்கிய ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் கோலங்கள் என்னும் சீரியலிலும் நடித்தார் தேவயானி. தற்போது தேவயானி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி செய்து வருகிறார்.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்து, ஆசிரியப்பணிக்குப் போன தேவயானி குடும்பத்தை கவனிப்பதிலும் கெட்டிக்காரர். தேவயானிக்கு இனியா, பிரியங்கா என இருமகள்கள் உள்ளனர். இவர்களோடு தேவயானி இருக்கும் படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அதில் ஒருமகள் அச்சுஅசலாக தேவயானி போலவே இருக்கிறார்.

நீங்களே பாருங்களேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares