கழுத்தில் புது தாலியுடன் மார்டன் உடையில் மகாலக்ஷ்மி… கல்யாணத்துக்கு பின் போட்ட முதல் பதிவு
நடிகை மகாலக்ஷ்மி திருமணத்திற்கு பிறகு புது தாலியுடன் வெளியிட்ட அழகிய மார்டன் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நடிகை மஹாலட்சுமி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மகாலக்ஷ்மியை தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த கையுடன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். மகாலட்சுமி போல் பெண் அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள் என்றும் ஆனால் மகாலட்சுமியே தனது வாழ்க்கையாக கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மகாலக்ஷ்மி புது தாலியுடன் மார்டன் உடையில் தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கை அழகாக இருக்கிறது. அதை நீங்கள் நடக்கச் செய்தீர்கள் என் புருஷா என பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.