பீகாரில்..
திருமணம் சார்ந்த பல விநோதமான சடங்குகள் மற்றும் சண்டைகள் வைரலாவதை கண்டிருப்போம். அந்த வகையில், தான் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் நபரை பெண் ஒருவர் என்னை கட்டிக்கோ கட்டிக்கோ எனக் கூச்சலிட்டபடி விரட்டிய சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.
பீகார் மஹுலி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த அந்த நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. 3 மாதமாக மணமகன் தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்திருக்கிறார்.
இதுமட்டுமின்றி பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்து ஒரு பைக்கையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கி கொண்டும் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார் மணமகன்.
இந்த நேரத்தில், தனது பெற்றோருடன் மார்க்கெட்டிற்கு சென்ற அந்த மணமகள், சந்தையில் அந்த மணமகனை பார்த்ததும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால், அந்த நபரோ அங்கிருந்து ஓட்டம்பிடிக்கவே, அவரை விரட்டியடி அப்பெண்ணும் பின்னாலேயே ஓடியிருக்கிறார். ஒரு வழியாக உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு வழியாக அந்த நபரை பிடித்த அப்பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார்.
எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற நினைத்ததும் அவர் வேண்டுமென்றே கல்யாணத்தை ஒத்திப்போட்டது தெரியவந்துள்ளது. பின்னர், தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சம்மந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
இதன்பின், இருதரப்பு குடும்பத்தினரும் சம்மதித்து கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். இது சம்மந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).एक शादी ऐसा भी
— Exclusive Post (@xclusivepost) August 28, 2022
जब शादी करने से भाग रहा था लड़का, तब लड़की ने उसे खुद पकड़कर रचाई शादी
मामला #बिहार के #नवादा का है। लड़की ने कहा कि पैसा और बाइक लेकर शादी करने से भाग रहा था लड़का#ExclusivePost#xclusivepost pic.twitter.com/LSpch8Sp5a