ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரோடு மண்ணில் புதைந்த அதிர்ச்சி சம்பவம்! 3 சடலம் மீட்பு

கேரளாவில் நிலச்சரிவு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, மலப்புரம், பத்தனம் திட்டா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இடுக்கியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டம் குடையத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன் அவரது மனைவது, அம்மா, மகள் மற்றும் பேத்தி என 5 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருரின் உடல்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Shares