jaffna7news

no 1 tamil news site

Article

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஜாமீன் பெற்ற 2 ஆசிரியைகள் காவல்நிலையம் வருகை! வெளியான புகைப்படம்

கள்ளக்குறிச்சி பள்ளி ஆசிரியைகள் கையெழுத்து போட இன்று காவல் நிலையம் வந்தனர்.

ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை நேற்று ஜாமீனில் விடுவித்தது நீதிமன்றம்

ஜாமினில் வெளிவந்த கள்ளக்குறிச்சி பள்ளி ஆசிரியைகள் கையெழுத்திட காவல் நிலையத்திற்கு இன்று வருகை தந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பனிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளித் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே ஜாமீன் கோரி இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நிபந்தனை அடிப்படையில் இவர்களுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஜாமீன் பெற்ற 2 ஆசிரியைகள் காவல்நிலையம் வருகை! வெளியான புகைப்படம் | Kallkuruchi Student Case Teachers Signature Police

இவர்களில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்றும் ஆசிரியைகள் இருவரும் சேலத்திலேயே தங்கி கையெழுத்து இடவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகியோர் இன்று வந்து கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares