பச்சை கற்பூரத்தை இப்படி செய்து பாருங்கள்.. பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்கள் வீடு தேடி வரும்..
பணம் பல மடங்கு பெருக, நீங்களும் முயற்சி செய்து தான் பாருங்களேன்! உங்கள் கையிலும் பணம் கட்டுக் கட்டாக சேர புது வழி.
பணத்தை ஈர்த்து வந்து நம்மிடம் சேர்ப்பதற்கு, நாம் பயன்படுத்தி வரக்கூடிய ஒரு பொருள்தான் பச்சை கற்பூரம். இந்த பச்சைக் கற்பூரத்தில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
பச்சைக் கற்பூரத்தின் மகிமையை ஓரளவிற்கு, எல்லாவிதத்திலும் நாம் அறிந்திருப்போம்.
மேலும், இந்த பச்சை கற்பூரத்தை வேறு எந்தெந்த விதத்தில் பயன்படுத்தினால், இரட்டிப்பு பலனை அடையமுடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
நம்முடைய வாழ்நாள் பிரச்சினையே பணம் ஒன்றுதானே! அதன் பின்னால் ஓடியே வாழ்க்கை முடிந்து விடுகிறது. சரி, பதிவுக்கு செல்லலாமா?
இந்த உலகத்திலேயே மிகவும் பணக்கார சாமி பெருமாள் சாமி என்று சொல்லுவார்கள்.
அதாவது, திருப்பதியில் கோடி கோடியாக பணம் சேரும். அந்த இடத்தில் பச்சை கற்பூரம் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
அங்கு செய்யப்படுகின்ற லட்டிலிருந்து, கொடுக்கப்படுகின்ற தீர்த்தம் வரை, பச்சை கற்பூரத்தின் பயன்பாடு அதிகம்.
இப்படியாக இந்த பச்சைக்கற்பூரம் எந்தெந்த இடத்தில் எல்லாம் அதிகப்படியான பயன்பாட்டில் இருக்கின்றதோ, அந்த இடத்தில் எல்லாம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
நீங்கள், உங்களுடைய வீட்டில், இறைவனுக்காக செய்யப்படும் எந்த ஒரு இனிப்பு பலகாரமாக இருந்தாலும், அதில் ஒரு துளி, ஒரு சிட்டிகை மிகவும் கம்மியான அளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து அந்த பிரசாதத்தை இறைவனுக்கு படைத்து வாருங்கள்.
உங்களுடைய வீட்டில் நிச்சயம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
அடுத்தபடியாக வீட்டிலிருக்கும் பெண்கள் தினந்தோறும் நெற்றிக்கு குங்குமம் இட்டுக் கொள்வீர்கள் அல்லவா.
அந்த குங்குமத்தில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி கலந்துவிட்டு, தினம்தோறும் பச்சை கற்பூரம் கலந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தால், பண ஈர்ப்பு அதிகரிக்கும்.
தினம்தோறும் பச்சை கற்பூரத்தை எடுத்து குங்குமத்தில் கலக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாள் குங்குமத்தோடு, கலந்து வைத்து, மூடி போட்டு விடுங்கள். அந்த வாசம் அந்தக் குடும்பத்திலேயே நிலைத்திருக்கும்.
அந்த குங்குமம் தீரும் வரை அப்படியே பயன்படுத்தி வரலாம். நீங்கள் நம்பவே மாட்டீர்கள்! தொடர்ந்து 48 நாட்கள் இப்படி குங்குமத்தை உங்கள் நெற்றியில் வைத்து பாருங்கள். கையில் காசு வருவதில் நன்றாக வித்தியாசம் தெரியும்.
இதே போல் ஆண்களும் விபூதி இட்டுக் கொண்டால், அந்த விபூதியில் லேசாக பச்சை கற்பூரத்தை கலந்து விட்டுவிட்டால் போதும்.
பச்சைக் கற்பூரம் கலந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது, உங்களுக்கு வராத பணம் கூட உங்களை தேடி வந்து மகிழ்விக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படியாக அந்த பச்சை கற்பூரத்தின் வாசம் நிரந்தரமாக உங்கள் மீது ஒட்டிக் கொண்டிருந்தால் பண வசியம் அதிகரிக்கும்.
சில பேருக்கு பச்சை நிற குங்குமம் வைக்கும் பழக்கம் இருக்கும். அது குபேரரது குங்குமம்.
அதில், இந்த பச்சை கற்பூரத்தை சிறிதளவு கலந்து வைத்து, தினமும் நெற்றியில் வைத்துக்கொண்டால் மேலும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீச வாய்ப்பு உள்ளது.
கடையில் வியாபாரம் நடக்க வில்லை. அலுவலகப் பணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. சம்பள உயர்வு இல்லை.
என்றாலும் ஆண்கள் நெற்றியில் இந்த பச்சை கற்பூரம் கலந்த விபூதியை வைத்துக்கொண்டு தான் பாருங்களேன்.
உங்கள் வீட்டு பூஜை அறையில், பஞ்ச பாத்திரத்தில் தினந்தோறும் தண்ணீர் வைப்பீர்கள்.
அந்த பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரமும் ஒரு துளசி இலை போட்டு வைப்பது நம் வீட்டிற்கு செல்வ செழிப்பை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
ஆனால் அந்த பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தினம்தோறும் மாற்றி அதன் பின்பாக பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்க பீரோவில் காசு இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் பர்ஸ்ஸில் காசு இல்லை என்றாலும் பரவாயில்லை.
ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, அதில் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது. அந்த ஒரு ரூபாய் கட்டாயம் பல நூறு ரூபாய்களாக பெருகும். ஏ.டி.எம் கார்டு வைக்கும் இடம், பேங்க் பாஸ்புக் வைக்கும் இடம், சொத்து பத்திரங்கள் வைத்து இருக்கும் இடம், இப்படியாக பணம் சம்பந்தப்பட்ட கோப்புகள்,
பணம் சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் எந்த இடத்தில் வைக்கிறீர்களோ அங்கு பச்சைக் கற்பூரத்தைப் போட்டு வைப்பது மிக மிக நல்லது.
பச்சைக் கற்பூரத்தை கால் மிதி படும் இடங்களில் போடக் கூடாது. அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கொடுக்கும் பட்சத்தில் இந்த முறையை தொடர்ந்து செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.