இருமுறை கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்; 3- வது முறை ஓடிப்போனதில் உயிரிழந்த பரிதாபம்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது பெரியகுப்பம். இந்த பகுதியில் உள்ள கம்பர் தெருவில் உள்ள வீட்டில் ஜோதீஸ்வரன் – அமுதா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர்.கடந்த சில மாதங்களாக இந்த தம்பதியினர் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலே இருந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.துர்நாற்றம் கடுமையாக வீசியதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருந்தது.போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அழுகிய நிலையில் இருந்த சடலம் அமுதா என்று கண்டறியப்பட்டது.அதாவது, அந்த வீட்டில் வசித்து வந்த ஜோதீஸ்வரனும், அமுதாவும் தம்பதிகளே அல்ல என்றும், இருவரும் கள்ளக்காதலர்கள் என்றும் தெரியவந்தது.
அமுதா திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய எருமைவெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரது கணவர் பாபு என்றும் போலீசாருக்கு தெரியவந்தது.36 வயதான பாபுவிற்கும், 30 வயதான அமுதாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் அமுதாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த பாபு மனைவி அமுதாவை கண்டித்துள்ளார்.ஆனாலும், அவர் பாபுவின் பேச்சைக் கேட்காமல் ஜோதீஸ்வரனுடனான பழக்கத்தை தொடர்ந்துள்ளார்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் பாபு மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு ஜோதீஸ்வரனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.பின்னர், இருவரும் பெரியகுப்பத்தில் உள்ள கம்பர் தெருவில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில்தான், அமுதா வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்து மூன்று நாட்கள் இருந்திருக்கும் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.அதேசமயத்தில், அமுதாவுடன் தங்கியிருந்த ஜோதீஸ்வரன் தற்போது மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த அமுதா ஏற்கனவே இரு முறை ஜோதீஸ்வரனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.இவரது கணவன் பாபு தனது மனைவியை தேடிச் சென்று வீட்டிற்கு அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.