நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் தொகுப்பாளராக, டான்ஸராக தனது பயணத்தை தொடங்கி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக இருந்து வருகின்றார். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து காக்கா முட்டை, கனா, வடசென்னை போன்ற சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமானார்.
மேலும், காக்கா முட்டை படத்தில் நடித்தருக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு சிறந்த நடிகை என்ற விருது கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும், இவரது அண்ணன் மணிகண்டனை நாம் பலருக்கும் தெரியும். அவர் முறை சீரியல் நடிகர் தான் குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் பிரபலம் அடைந்தார். இவரது மனைவி சோபியாவும் டான்சர் ஆஃபர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியில் டான்சராக கலந்து கொண்டு பிரபலம் அடைந்து. பின் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு.. மிஸ்டர் அண்ட் மெசேஜ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள். இப்படி ஒரு நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்
சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் மூன்றாவது சீசனில் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணி சோபியா கலந்து கொள்ள இருக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனைத் தான் தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றார்கள்…