பிரி.ந்து சென்ற மனைவி திரும்பி வர மறுத்ததால் கணவன் எடுத்த அ.திர்ச்சி முடிவு!!

வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துவின் மகள் நதியா(30). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஆவதம்பாக்கம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சபாபதி என்பவருடன் திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றன.

இவர்களுக்கு 5 ம் வகுப்பு பயிலும் ஹேமலதா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மனைவி நதியா வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் பகுதியிலுள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு சபாபதி, தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் இதற்கு அவர் மறுப்பு கூறியதால் ஆத்திரமடைந்த சபாபதி அவரது மனைவியின் கண் முன்னே திடீரென அவர் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை கொண்டு தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நதியாவின் குடும்பத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், 108 ஆம்புலன்ஸ் உதவியோடு சபாபதியை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வாலாஜாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் வீட்டுக்கு வருமாறு அழைத்து வர மறுத்ததால் கணவன், மனைவி கண் முன்னே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Shares