பாகிஸ்தானில் 70 வயதான பெண் 37 வயதான நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன்மூலம் காதலுக்கு வயது தடையாக இருக்காது என்பதை இந்த தம்பதி நிரூபித்துள்ளனர். இப்திகர் என்ற ஆணுக்கு 37 வயதாகிறது. கிஷ்வர் பிபி என்ற பெண்ணிற்கு 70 வயதாகிறது.
இருவருக்கும் 33 வயது வித்தியாசம் உள்ள நிலையில் பல காலங்களாக காதலித்தனர். வயது வித்தியாசம் காரணமாக தங்கள் திருமணத்திற்கு குடும்பத்தாரை வற்புறுத்த முடியவில்லை. இந்த சூழலில் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இப்திகருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 குழந்தைகள் உள்ள நிலையிலும் கிஷ்வரை மறக்க முடியாமல் இருந்தார், தொடர்ந்து இருவரும் சந்தித்து வந்தனர். அதே நேரத்தில் கிஷ்வர் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இப்திகருக்காகவே காத்திருக்கிறார்.
தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் கணவருடன் கராச்சிக்கு தேனிலவு செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் வந்தாலும், பலரும் விமர்சனமும் செய்துள்ளனர்.