ஏமாற்றிய பே.ஸ்புக் காதலன் விரக்.தியில் இளம்.பெண் எடுத்த முடிவு சகோ.தரருக்கு அனுப்பிய குரல் பதிவு!!

சென்னையில் பேஸ்புக் காதலன் திருமண ஆசை காட்டி ஏமாற்றியதால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜமீன் பல்லாவரத்தை அடுத்த பச்சையம்மன் நகரைச் சேர்ந்த கல்லூரி மனைவி கீர்த்திகா.இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலமாக சுதீஷ் என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்.

நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி சுதீஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கீர்த்திகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கீர்த்திகா தற்கொலை செய்து கொண்டதற்கான கடிதம் மற்றும் அவரது அண்ணனுக்கு அனுப்பிய ஆடியோ பதிவு ஆகியவற்றை கைப்பற்றிய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Shares