திடீ.ரென ரா ஜா ரா ணி 2 சீரி யலி ல் இரு ந்து வில கிய அர் ச் சனா..!! இ னி அவ.ருக் கு பதி ல் நடிக் க இரு ப்ப து இ வரா ..?? என்.ன கார ண ம் தெரி யு மா

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.அதுவும் குறிப்பாக ராஜா ராணி 2 சீரியல் குடும்ப பெண்களின் ஃபேவரைட் சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வருகிறார் . சந்தியா கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் ஆலியா நடித்து வந்தார். தற்போது அவர் விலகியதும் ,

அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சந்தியாவாக ரியா நடிக்க மறுத்தாலும் , பின்னர் தன்னுடைய தத்ரூபமான நடிப்பால் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இதனால் ஆலியாவை மறந்து விட்டு ரியாவை சந்தியாவாக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த சீரியலில் காமெடி மற்றும் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வரும் நடிகை தான் அர்ச்சனா .இவரும் இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார் . தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் .

அதன் மூலம் இவருக்கு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது . இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் இருந்து அர்ச்சனா விலகப் போவதாக தகவல் வெளியானது .மேலும் இந்த சீரியளின் வெற்றிக்கு அர்ச்சனாவின் பங்கும் பெரிய அளவில் இருக்கிறது. இந்நிலையில் அர்ச்சனா திடீரென விலக இருப்பது,

ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மேலும் சமீபத்தில் கூட அர்ச்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்தது . அதனால் கல்யாண வேலை காரணமாக கூட விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆலியாவின் இடத்தை நடிகை ரியா நிரப்பி விட்டார் .

ஆனால் அர்ச்சனாவின் இடத்தை நிரப்ப முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ராஜா ராணி 2அர்ச்சனா கதாபாத்திரத்தில் இனிமேல் ஈரமான ரோஜாவே சீரியல் நடித்த அர்ச்சனா குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *