டிக் டா.க் முதல் பிக் பாஸ் வரை…. நடிகை ம.ர்ம மர.ணம் : ரசிகர்.கள் அதி.ர்ச்சி!!

டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக தனது பணியாளர்களுடன் கோவாவிற்குச் சென்றிருந்தார்.

அஞ்சுனாவில் உள்ள கிராண்ட் லியோனி ரிசார்ட்டில் தங்கியிருந்த அவருக்கு திங்கட்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. சோனாலியின் திடீர் மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

43 வயதான சோனாலி ஹரியாணாவின் பதேஹாபாத்தில் உள்ள புதான் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானார்.

கடந்த 2020-ல் அவர் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் மூலம் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்ஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதோடு எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஆதம்பூர் இடைத் தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் சோனாலியை நிறுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில் கோவா சென்றிருந்த சோனாலி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

உயிரிழப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சோனாலி போகத் தனது படத்தையும் பகிர்ந்துள்ளார். சோனாலியின் அகால மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   Siragadikka Aasai: கொலுவில் விஜயா பாடிய பாடல்! ஒன்ஸ்மோர் கேட்ட அண்ணாமலை
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares