காதல் மனை.வியின் கல்லறை அருகே! 25 ஆண்.டுகளாக குழிதோண்டி காத்தி.ருந்த தாத்தா

தமிழகத்தில் காதல் மனைவியின் கல்லறை அருகே 25 ஆண்டுகளாக குழிதோண்டி காத்திருந்த 98 வயதான தாத்தாவின் இறுதி ஆசையை நிறைவேற்றியுள்ளது அவரது குடும்பம்.

தமிழகத்தின் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.சி.குப்பன்(வயது 98), முன்னாள் ராணுவ வீரர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் குப்பன் உயிரிழக்க, அவரது மனைவியின் கல்லறை அருகே அவரது விருப்பப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார்.

சுமார் 25 ஆண்டுகளாக தனக்காக கல்லறையை தோண்டிவிட்டு காத்துக்கிடந்துள்ளார் குப்பன்.

இதுகுறித்து அவரது மகன் பிரபாகரன் கூறுகையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், என்னுடைய தாயை விட்டு அவர் பிரிந்திருந்த நேரமே தாயின் மீதான் காதல் அதிகரிக்க காரணமானது.

ராணுவத்தில் ஓய்வு பெற்ற பின்னர் வண்ணாங்குளத்தில் சொந்தமாக நிலத்தை வாங்கி பராமரித்து வந்தார்.

இருவரில் யார் மரணமடைந்தாலும் அங்கே தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என அடிக்கடி கூறிவந்தார்.

கடந்த 1998ம் ஆண்டு என் தாய் இறந்த போது அங்கே அடக்கம் செய்தோம், அடுத்த சில நாட்களில் மனைவியின் கல்லறை அருகே குழி தோண்டினார், அங்கே தான் தன்னையும் புதைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அவரது ஆசைப்படியே குப்பனின் உடலும் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது, மனைவிக்காக சுமார் 25 ஆண்டுகளாக காத்திருந்து கல்லறையிலும் ஒன்றிணைந்த குப்பனின் காதலை கண்டு தமிழகமே வியக்கும் என்றால் அது மிகையல்ல!!!

Shares