இன்றைய காலகட்டத்தில், திருமணம் நடைபெற இருக்கும் சமயத்தில், அதனை சுற்றி நடைபெற்று வரும் அதிர்ச்சி சம்பவங்கள், அதிகம் அரங்கேறி வருகிறது. தெலங்கானா மாநிலம், ஹனம்கொண்டா என்னும் பகுதியை சேர்ந்தவர் அன்வேஷ். இவர் அமெரிக்காவில் மென்பொருள் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார்.
இவருக்கும் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பின்பு திருமணத்தை ஒரு வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று அன்வேஷ் அவசரம் காட்டியுள்ளார். மணமகன் கூறியபடி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெண் வீட்டார் நிச்சயதார்த்தின் போது வரதட்சணையாக 15 லட்சம் கொடுத்த நிலையில், இன்னும் 10 லட்சம் ரூபாய் திருமணத்தின் போது தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் மணமகனான அன்வேஷ், கழிவறையில் வழுக்கி விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மீண்டும் தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அன்வேஷ் கூறி உள்ளார். தொடர்ந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனைத்து பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக மருத்துவர்கள் இவரது உடம்பில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை… இவர் கீழே விழவும் இல்லை என்று கூறியுள்ளார். பின்பு மாப்பிள்ளை நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.
ஆம் திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால் இவ்வாறு நாடகமாடியதாக கூறியுள்ளார். பெண் வீட்டார் கோபத்தில் இளைஞரை அடிக்க சென்ற நிலையில், இறுதியாக திருமணத்தை நிறுத்தவும் இரு வீட்டார் முடிவு செய்துள்ளனர்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).