பரோட்டா தொண்டையில் சிக்கி இளைஞர் மரணம்.. எச்சரி.க்கை செய்தி!

கேரளாவில் பரோட்டா தொண்டையில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கில் மாநிலத்தில் உள்ள கட்டப்பனா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தொண்டையில் ‘பரோட்டா’ சிக்கிய வாலிபர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் பன்னியர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லொறி கிளீனராக வேலை பார்த்துவரும் 34 வயதான பாலாஜி, வேலை முடிந்து உரம் ஏற்றிச் சென்ற லாரியில் தங்குவதற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இவர் இடுக்கியில் இருந்து வாங்கி வந்த பரோட்டா, லாரியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் சிக்கியது.

மூச்சு விட முடியாமல் தவித்த பாலாஜியின் நண்பரான டிரைவர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இறந்தவருக்கு சாந்தி என்ற மனைவியும், அர்ஜுன், அஸ்வின் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

Shares