India NewsNews

ஆண் நண்பர்களுடன் கொண்டாட்டம்… மது.போதை.யில் தள்ளாடிய தோழிகள்!

கன்னியாகுமரியில் காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி. இரவில் மொட்டை மாடி ஏறி கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் பி.ஏ 3ம் ஆண்டு படித்து வரும் நிலையில் கடந்த 6 வருடங்களாக அஜின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணிற்கு கஞ்சா, மது போதை பழக்கமும் இருந்துள்ளது. சில நாட்களாக கல்லூரி மாணவி அஜினுடன் இருந்த காதலை குறைத்துக்கொண்டுள்ளார். மேலும் அவர் வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது, கஞ்சா அடித்துக்கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதுகுறித்து காதலன் கேட்டதால் அவரை விட்டு பிரிந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இரவு அந்த பெண் தன் ஆண் நண்பர்களான ஆகாஷ், மணிகண்டனை வரவழைத்து இரவு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த பார்ட்டிக்கு தன்னுடன் படிக்கும் 2 தோழிகளையும் வரவழைத்துள்ளார். அதில், 1 மாணவிக்கு ஆண்களும் வருவார்கள் என்று தெரியவில்லை. மது குடிக்கும் ஆசை ஏற்பட்டதால் அந்த பார்ட்டிக்கு அந்த மாணவி ஒப்புக்கொண்டு இரவு 7 மணிக்கு சென்றுள்ளார். அங்கு மது மட்டுமல்லாமல் கஞ்சாவையும் அந்த மாணவியை வற்புறுத்தி புகைக்க வைத்துள்ளனர்.

இதனை அறிந்து அங்கு சென்ற அஜின் காதலியும் அவரது தோழிகளும் ஆண் நண்பர்களுடன் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்து மரக்கட்டையை எடுத்து சென்று நண்பர்களை ஓடஓட விரட்டியதோடு காதலியை தலையில் கட்டையால் ஓங்கி அடித்து மண்டையை உடைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

காதலி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது குளச்சல் போலீசாரிடம் அஜின் மீது புகார் அளித்தார். அந்த வீட்டை போலீசார் ஆய்வு செய்த போது புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆணுறைகளை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares