கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்! மூடப்பட்ட அ.றையில் ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பில் ரகசியத்தை உடைத்த 2 தோழிகள்.நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி முன்னால் சாட்சியம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது 2 தோழிகள் காவல் துறையினரிடம் நடந்த அனைத்தையும் விரிவாக தெரிவித்து ரகசியத்தை உடைத்துள்ளனர்.

ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்தது.

ஶ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையையும் கடந்த 1ம் திகதி ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பரானியிடம் அறிக்கையாக நேற்று தாக்கல் செய்தது ஜிப்மர் மருத்துவ குழு.

இந்த சூழலில் மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் தங்கிப்படித்த அவரது 2 தோழிகள் காவல் துறையினரிடம் விரிவாக பல தகவல்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலம் இவ்வழக்கின் முக்கிய சாட்சியமாக கருதப்படுவதால் மாணவியின் தோழிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி. பொலிசார் முடிவு செய்து, அதற்கான ஒப்புதலை நீதிமன்றத்திடம் இருந்து பெற்றனர்.

இதன் அடிப்படையில், திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் ஸ்ரீமதியின் தோழிகள் 2 பேர், அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, சுமார் 2 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர்.

நீதிபதி புஷ்பராணி, இரு மாணவிகளின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துகொண்டார். ஜிப்மர் மருத்துவ குழுவினரின் அறிக்கை மற்றும் 2 மாணவிகளின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகவும் , விடை தெரியா கேள்விகளுக்கு விடையாகவும் அமையும் என்கின்றனர் காவல்துறையினர்.

மறக்காமல் இதையும் படியுங்க   வட்சப்பில் போலி தகவல் பகிர்வைத் தடுக்க புதிய அப்டேட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *