பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் காஸ்டிங் கவுச் எனப்படுவது சினிமா துறையில் அதிகம் நடப்பதாக பல நடிகைகள் இதற்கு முன்பு வெளிப்படையாக புகார் கூறி இருக்கின்றனர்.
தற்போது தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா அது பற்றி பேசி இருக்கிறார். சினிமா துறையில் அது இருப்பது உண்மை தான் என கூறி இருக்கும் அவர், தானும் அதை சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது சினிமா துறை மட்டுமின்றி மற்ற அனைத்து துறைகளிலும் நடக்கிறது.
மல்டிநேஷ்னல் நிறுவனங்களில் பணியாற்றும் என் தோழிகள் கூட அது பற்றி கூறி இருக்கிறார்கள். அதனால் casting couch எல்லா துறைகளிலும் இருக்கிறது என தேஜஸ்வி மடிவாடா குறிப்பிட்டு இருக்கிறார்.
“படுக்கையை பகிராமல் எப்படி உனக்கு சினிமாவில் பெரிய இயக்குனர்கள் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது?” என கேட்ட அவரது பாய் பிரெண்டை தேஜஸ்வி பிரேக்கப் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.