நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.
வெளிவந்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது திருச்சிற்றம்பலம்.
இந்நிலையில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 32 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.