ஆண் துணை தேவையில்லை : தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை : ஆடிப்போன ரசிகர்கள்!!

குஜராத்தில் நடிகை கனிஷ்கா சோனி என்பவர் ஆணுடன் வாழ விருப்பமில்லை என தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை கனிஷ்கா சோனி. இவர் நடிகர் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு, இந்தி படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.

மேலும், மாடலாகவும் பணியாற்றிய இவர், தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில், வெளியிட்ட வீடியோவில், “இந்திய கலாச்சாரத்தின் படி திருமணம் என்பது அன்பு மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது.

இதனால், என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். என் கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன.இந்த உலகில் என்னை மட்டுமே நான் நேசிக்கிறேன். எனக்கு ஆண் துணையே தேவையில்லை. தனியாக இருப்பதே மகிழ்ச்சி.

எனக்குள் வலிமையும் சக்தியும் கொண்ட சிவனும் சக்தியும் வசிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கனிஷ்கா தனது நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares