India NewsNews

தண்ணீர் பிடிக்க சென்றபோது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்

ஈரோட்டில் பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்த ரகுநாதன் மனைவி திவ்யபாரதிக்கு வீட்டில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது.

ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அறிகுறிகளை பார்த்த மருத்துவர் பாம்பு கடித்து இருக்கலாம் என கூறியதால் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையே வீட்டில் திவ்யபாரதியை கடித்த பாம்பு பதுங்கி இருந்தது தெரியவந்தது. பாம்பு பிடி வீரர் யுவராஜ் பாம்பை லாவகமாக பிடித்தார்.இதற்கிடையே திவ்யபாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares