கண் இமைக்கும் நே.ரத்தில் உடைந்து விழுந்த 4 மாடி கட்டடம்.அதிர்ச்சி வீடியோ!!

மகாராஷ்டிர மாநிலத்தில், கண் இமைக்கும் நேரத்தில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு நேர்ந்த நிலை தெடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் போரிவாலி மேற்கு பகுதியில், இன்று மதியம் சுமார் 12:30 மணியளவில், யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

அங்குள்ள சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகர் என்னும் பகுதியில், கீதாஞ்சலி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடமானது, மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், யாரும் வசிக்கக் கூடாது என்றும் கூறி, முன்னதாக குடியேறி இருந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், மதியம் சுமார் 12:30 மணியளவில், அந்த கட்டிடம் அருகே சில வாகன ஓட்டிகள் சென்று கொண்டும், சிலர் அப்பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டும் இருந்தனர்.

அப்படி ஒரு சூழ்நிலையில், திடீரென அந்த கீதாஞ்சலி கட்டிடம், அசைந்தது போல இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு வேளையில், அடுத்த சில வினாடிகளிலேயே அந்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இதனைக் கண்டதும் அப்பகுதியில் கூடி இருந்த மக்கள் அனைவரும், அதிர்ச்சியில் கத்தி கூச்சல் போடவும் செய்தனர்.

முன்னதாக, யாரும் அங்கே வசிக்கவில்லை என்றாலும், யாராவது இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் அறிந்து, உடனடியாக தீயணைப்புத் துறையினர், அவசர கால சேவை வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. அதே போல, கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததும் அங்கிருந்த பொது மக்கள், கூச்சலிட்ட படியே அலறி ஓடியதும் பலரை பதற்றம் அடைய வைத்துள்ளது.

Shares