உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது ஷாஜகான்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள மெகமத்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சையப் அலி. இவர் அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனிடையே இவருக்கு வெளியூரில் வேலை கிடைத்துள்ளது. இதனிடையே அதற்கு முன்னர் அவரது காதலியை சந்திக்க விரும்பியுள்ளார். அவர் காதலை இருக்கும் பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால் காதலியை சந்திக்க விபரீதமாக சிந்தித்துள்ளார்.
அதன்படி இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா ஒன்றை அணிந்த அவர், தனது காதலியின் வீடு இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று அங்கும் இங்கும் சென்றுள்ளதால் அங்கிருந்தவர்களுக்கு இவரின் செயலின்மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், அவரை சிலர் அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் குரல் ஆண் குரல் போல இருப்பதால் சந்தேகம் வலுத்து முகத்தை காட்டக்கூறியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி அவர் தனது முகத்தை காட்டியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் இது குறித்து கேட்டபோது தனது காதல் விவகாரத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், புர்கா அணிந்து சென்ற சையப் அலியை போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.