பங்குச்சந்தையில் தனியார் பங்குச்சந்தையில் முதலீடு செய்து தினமும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரயில் நகர் 7-ஆவது தெருவில் வசித்து வரும் 32-வயதான சிவசங்கரி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23-ஆம் தேதி மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், சிவசங்கரி வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதிகள் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காமாட்சி அவர் கணவர் கார்த்திகேயன், தம்பி பத்ரகாளிமுத்து, மாமனார் ஜெகநாதன், மாமியார் மகேஸ்வரி, குடும்ப நண்பரான விக்னேஸ்வரன்,
அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து காஞ்சிபுரம் IFS, Aruthra Gold, அப்போலோ, எல் & டி, ஹிந்துஸ்தான், HDFC, TATA STEEL, நிஃப்டி, IFS போன்ற பல்வேறு பங்கு சந்தைகளில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பதாகவும், நானும் என் கணவரும் இவர்கள் மூலம் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்ததால் நிறைய லாபம் எங்களுக்கு கிடைக்கின்றது என்று சொல்லி என்னிடமும் என் கணவரிடம் பணம் கேட்டனர்.
ஆரம்பத்தில் நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டோம். தொடர்ந்து காமாட்சி மற்றும் அவர் கணவர் கார்த்திகேயன் மேற்கண்ட நபர்கள் அனைவரும் சேர்ந்து என் வீட்டிற்க்கு அடிக்கடி நேரில் வந்து பேசி நானும் எனது கணவரும் நம்பும் வகையில் அவர்கள் பங்கு சந்தை மூலம் தினமும் 5 முதல் 10 லட்சம் லாபம் சம்பாதிப்பது போல் அது தொடர்பான விளம்பரங்கள் செய்திகளை எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி ஆசையை தூண்டி எங்களை நம்ப வைத்தனர்.
நாங்கள் முதலீடு செய்யும் (CAPITAL MONEY) முன்பணம் 100% பாதுகாப்பானது எனவும் முன் பணத்தைத் திருப்பி கிடைக்க வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு சொன்னால் போதும் திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்த அவர்கள் 10% லாபம் தருவதாகவும் கூறினார்கள்.
காமாட்சி குடும்பம் என் எதிர் வீட்டில் குடியிருந்ததால் முதலீடு பணத்தை காமாட்சி மற்றும் அவரது குடும்பத்தார் சொல்லும் வங்கி கணக்கிற்கு கொடுக்குமாறு கூறியதால் இவர்களின் பேச்சை நானும் என் கணவரும் முழுமையாக நம்பினோம்.
அதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி சிவசங்கரி கணவரின் மாத சம்பளம் சேமிப்பு, அவரது மாமனாரின் சேமிப்பு பணம், நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கிய பணம் என மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரத்தை மூன்று தவணைகளாக சிவசங்கரி வங்கி கணக்கில் இருந்து காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார்.
ரூபாய் 16,50,000 பங்கு சந்தையில் முதலீடு செய்ததை தொடர்ந்து ஒரு மாதம் மட்டும் ஊாக்க தொகை என கூறி 9.9.2021ஆம் தேதி ரூபாய் 50 ஆயிரம் மட்டும் பணம் கொடுத்ததாக கூறினர்.அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் பனம் ஏதுவும் கொடுக்கவில்லை காரணம் கேட்டால் (Income tax problem) வரிமான வரித்துறை பிரச்சனை என்ற காரணம் காட்டி காலம்தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
காமட்சி, விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மீது சிவசங்கரி குடும்பத்திற்கு சிறிது சந்தேகம் எழுந்ததால் இவர்கள் செலுத்திய முன் பணம் ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் பணம் திருப்பி கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய காமாட்சி குடும்பத்தினர் பணம் திருப்பித் தருவதாக கூறி ஐகோட் மகாராஜன் என்பவரின் பெயரில் ஆவணம் மற்றும் காசோலை கொடுத்துள்ளனர்.
சிவசங்கரி காமட்சி மற்றும் விக்னேஷ்வரன் வங்கி கணக்கில் பணம் செலுத்திய நிலையில் சம்மந்தமே இல்லாத நபரான ஐகோட் மகாராஜன் பெயரில் காசோலை கொடுத்ததால் சந்தேகம் ஏற்பட்டு பணத்தை உங்களிடம் தான் கொடுத்தேன் ஐகோட் (i kot) மகராஜன் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று சொன்னதற்கு ஐகோர்ட் மகாராஜன் எங்களுடைய பிசினிஸ் பார்ட்னர் என்று அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
காசோலையை சிவசங்கரி வங்கி கணக்கில் செலுத்தியபோது insufficient Fund என்று வந்ததால் காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் குடும்பத்தினர்களை தொடர்பு கொண்டபோது பிசினஸில் பிரச்சனை ஆகிவிட்டது என கூறிய அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு காசோலையை திரும்பி வாங்கி கொள்வதாக கூறி போனை துண்டித்துவிட்டனர்.
நான் மறுபடியும் செல்போனில் தொடர்பு கொண்டபோது போன் எடுக்கவில்லை. இவர்கள் வீட்டிற்கும் வருவதும் இல்லை. வீடு நிரந்தரமாக பூட்டு போடப்பட்டிருந்தது. நிறைய மக்கள் இவர்களை தேடி வீட்டிற்கு வர ஆரம்பித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது காமாட்சி மற்றும் மேற்கண்ட நபர்கள் பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாகக் கூறி சிவசங்கரியை போல் பலரையும் ஏமாற்றி பல கோடி கணக்கில் பணமேசாடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டது சிவசங்கரிக்கு தெரியவந்துள்ளது.
பங்கு சந்தை டிரேடிங் என்று பொய் சொல்லி முதலீடாக பெற்ற பல கோடி பணத்தை எல்லாம் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் இயங்கிவரும் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சர்வீஸ் மற்றும் வேறு சில நிறுவனங்களில் காமாட்சி மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விக்னேஸ்வரன் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோரின் பெயரில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல்வேறு இடங்களில் இவர்களுடைய பெயர்களில் சொத்துக்கள் ஆடம்பர கார்கள் மற்றம் தங்க நகைகள் வாங்கி வைத்துக்கொண்டு சிவசங்கரியை போன்று பலரை ஏமாற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது.
பங்கு சந்தையில் டிரேடிங் செய்வதாக கூறி பொதுமக்கள் நம்பும் வகையில் பல பொய்யான விஷயங்களை சொல்லி நம்ப வைத்து பலரை ஏமாற்றி சுமார் 5 கோடி மோசடி செய்துள்ள காமாட்சி, கார்த்திகேயன், விக்னேஸ்வரன்.
இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு ஐகோட் மகாராஜன், பத்ரகாளிமுத்து, புவனேஸ்வரி, மகேஸ்வரி, ஜெகநாதன், ஆகியோர் மீது தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் 403, 406, 420, 465, 34 ipc ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் காமாட்சி மற்றும் விக்னேஷ்வரன் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.