சமூகவலைதளவாசிகளால் கொண்டாடப்படும் ஏஞ்சலாக மாறிய ஏஞ்சல். மாற்று திறனாளி ஒருவருக்கு இரு சக்கரவாகனத்தை பின்னால் இருந்து தள்ளி கொண்டு தனது எஜமானருக்கு சாலையை கடக்க உதவிபுரிந்த நாயை ஏஞ்சல் சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
மாற்று திறனாளி ஒருவருக்கு நாய் ஒன்று தொண்டு புரிந்தது, அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாய் ஒன்று தனது எஜமானருக்காக அவருடைய வாகனத்தை சாலையில் தள்ளிகொண்டு வந்தது மற்றும் மனிதர்கள் எல்லோரும் சாலையை கடக்க காத்திருந்த போது அந்த நாயும் சாலையை கடக்க நேரம் பார்த்து செல்ல வேண்டிய நேரம் வந்ததும் தனது எஜமானரை பின்னால் இருந்து அவருடைய வண்டியை தள்ளி அவருக்கு உதவி புரிந்தது அங்கிருந்தவர்களுக்கு மற்றும் அல்லாது சமூக வலைதள வாசிகளை கொண்டாட வைத்துள்ளது.
மனிதர்களை விட விசுவாசமானது எனவும் ஸ்மார்ட் ஆனது எனவும், தேவதைகளுக்கு இறக்கைகள் அல்ல பாதங்கள் மட்டுமே உள்ளது எனவும் இதை மறுபடியும் தெரிவிக்கிறேன் என்றும் சாதுரியமாகவும், விசுவாசமாகவும் இருக்கும் ஒரே உயிரினம் நாய் தான் என்றும் சமூக வலைதளவாசிகள் பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவானது முதலில் ‘டிக் டாக்கில்’ பகிரப்பட்டு தற்போது ‘டுவிட்டரில்’ வைரல் ஆகி வருகிறது.
THIS IS THE MOST BEAUTIFUL VIDEO YOU WILL SEE TODAY OMG 😭😍 pic.twitter.com/vtjCbmVga1
— Aqualady𓅇 𓅋 𓆘 (@Aqualady6666) August 4, 2022