பணத்திற்காக தம்பதி செய்துவந்த மோசமான செயல்
பங்கு சந்தையில் தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் 7வது தெருவில் வசித்து வருபவர் சிவசங்கரி (வயது 32). இவர் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

சிவசங்கரி வசிக்கும் வீட்டின் எதிர் வீட்டில் காமாட்சி, கார்த்திகேயன் தம்பதிகள் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் காமாட்சி அவர் கணவர் கார்த்திகேயன், தம்பி பத்ரகாளிமுத்து,

மாமனார் ஜெகநாதன், மாமியார் மகேஸ்வரி, குடும்ப நண்பரான விக்னேஸ்வரன், அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து பங்கு சந்தைகளில் முதலீடு செய்து தினமும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லாபம் சம்பாதிப்பதாக கூறினர்.

நானும் என் கணவரும் இவர்கள் மூலம் பங்குசந்தையில் பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக்கும் என்று சொல்லி என்னிடமும் என் கணவரிடம் பணம் கேட்டனர்.