ராணிப்பேட்டையில் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ள நிலையில், மனைவி நடுஇரவில் சமையலறைக்கு சென்று கொடுத்த தண்டனையால், கணவர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். கணவரின் தவறான போக்கு மனைவிக்கு தெரியவரவே கணவரைக் கண்டித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கணவரிடம் கண்ணீர் வடித்து கெஞ்சியுள்ளார். ஆனாலும் கணவர் மனம் மாறாத நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. மனக்குமுறலில் தவித்த மனைவியை கண்டுகொள்ளாமமல் கணவர் தூங்க சென்றுள்ளார்.
இரவு முழுவதும் தூங்காமல் அழுதுகொண்டிருந்த மனைவி, பின்பு கோபத்தில் எழுந்து சமையலறைக்கு சென்று வெந்நீரை கொதிக்க வைத்துள்ளார். பின்பு கணவரின் ஆடையை விலக்கி அவரின் மர்ம உறுப்பில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார்.
வலியால் அலறித்துடித்த நபரின் குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து குறித்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மனைவியிடம் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).