கணவருடன் விவாகரத்து – மதபோதகராக மாறிய பிரபல தமிழ் நடிகை!

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த மோகினி, அமெரிக்காவில் மத போதகராக மாறியுள்ளார் பரத் – மோகினி தம்பதிக்கு அனிருத், அத்வைத் என்ற இரு மகன்கள் உள்ளனர்

1991ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மோகினி.

தஞ்சாவூரில் பிறந்த இவர் மகாலட்சுமி என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக மோகினி என மாற்றிக்கொண்டார். பல தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

பரத் என்பவரை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறிய மோகினி, 2006ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்.

இந்த நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்ட மோகினி, அமெரிக்காவில் கிறிஸ்த்துவ மதபோதகராக மாறியுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   பொது இடத்தில் நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நடிகர்- அதிர்ச்சியில் திரையுலகம்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares