Article

அக்காள் – தங்கைகள் மூன்று பேரை தமிழ் பாரம்பரிய முறையில் மணந்த 3 பிரான்ஸ் இளைஞர்கள்! புகைப்படம்

பிரான்ஸில் வசிக்கும் அக்காள் தங்கையான மூன்று பேருக்கு 3 பிரான்ஸ் இளைஞர்களுடன் நடைபெற்ற திருமணம் மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்கள்.

பிரான்ஸில் வசிக்கும் அக்காள் தங்கையான மூன்று தமிழ்ப்பெண்கள் அந்நாட்டை சேர்ந்த மூன்று இளைஞர்களை தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மாசிலாமணி-ஆனந்தி தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்கள்.

அங்கு மாசிலாமணி, தனியார் உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு காயத்ரி, கீர்த்திகா, நாராயணி என 3 மகள்கள் உள்ளனர்.

3 பேரும் பிரான்சில் படித்து, அங்கேயே பணியாற்றி வருகின்றனர். மூவரும் பிரான்ஸை சேர்ந்த வாலிபர்களை காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாசிலாமணி குடும்பத்தினர், தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று மாசிலாமணி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தனது உறவினர்களுடன் வந்தார்.

தங்களின் 3 மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ ஆகிய மூவருக்கும் திருச்செந்தூர் கோவிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி மாலை மாற்றி திருமணம் நடத்தினார்.

மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர். தம்பதிகள் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares