இன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. மேலும் மகப்பேறு காலங்களுக்கு பின்பு பெண்களுக்கு உண்டாகும் தொப்பைகளை கூட இந்த முறையை பின்பற்றினால் சுலபமாக குறைத்துவிடலாம். தொப்பையை குறைப்பதற்கான சுலபமான வழிமுறையை கீழே பார்க்கலாம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி அதனுடன் 1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.கொதிக்க வைக்கும் போது.. கேஸ் அடுப்பினை மீடியம் மோடில் வைக்கவும்.அப்போது தான் வெந்தயத்தின் மருத்துவ குணம் நீரில் நன்கு கலந்துவிடும்.தண்ணீர் கலர் மாறும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.கொதிக்க வைத்த தண்ணீர் பாதி கிளாஸ் ஆகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
வெந்தய தண்ணீர் பாதி கிளாஸ் ஆனவுடன் கேஸ் அடுப்பினை ஆப் செய்யவும்.பின்பு அதனை மூடிவைத்து சிறுது நேரம்(இளம் சூடு வரும்வரை) ஆற வைக்கவும்.
ஆறவைத்த அந்த நீரை வடிக்கட்டி ஒரு க்ளாசில் எடுத்தது அதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி மிதமான சூட்டில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.ஒரு வாரம் காலை மாலை தொடர்ந்து இவ்வாறு குடிப்பதன் மூலம் உங்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை எடைகுறையும். வீடியோ இணைப்பு கீழே உள்ளது, பார்த்து பயனடையுங்கள்