வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடிகளை வீட்டில் வைத்தால் போதும்.. வீட்டில் பணமழை கொட்டுமாம்!

வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில தாவரங்களை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் பிறக்கும் தமிழ் புத்தாண்டு முதல், நமது வீடுகளுக்குள் அதிர்ஷ்ட தேவதையை வரவழைக்க வேண்டும் என்றால் பின்வரும் தாவரங்களை நமது வீடுகளுக்குள் வைக்கலாம்
வாழை மரம்

பொதுவாக வாழை மரத்தை விடுகளுக்குள் அதிகம் யாரும் வளர்ப்பதில்லை. ஆனால் வாழையை ஒரு தொட்டியிலோ அல்லது ஒரு பானையிலோ ஊன்றி வைத்து அதை வீட்டிற்குள் வைக்கலாம்.

வாழையானது தன்னைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து அந்த பகுதி முழுவதையும் நன்மையான அதிா்வலைகளால் நிரப்புகிறது. ஆனால் கண்டிப்பாக வாழையை வீட்டின் மேற்கு திசையில் ஊன்றி வைக்கக்கூடாது.

நொடியில் சுவையான முட்டை சாண்ட்விச் செய்வது எப்படி?

மணி பிளாண்ட்

மணி பிளாண்ட் ஆனது லட்சுமி தேவியின் மறு உருவம் என்று கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டிற்குள் வைத்தால், லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவாா் என்றும், குடும்பத்திற்கு பல வகையான பண வரவுகள் வரும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த செடியை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
அசோகா செடி

அசோகா செடியானது ஒரு மங்களகரமான செடியாகக் கருதப்படுகிறது. இவை நோ்மறை சக்திகளைக் கொண்டது.

இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டைச் சுற்றி இருக்கும் பிற தாவரங்களில் இருந்து வரும் தீமைகள் நீங்கும் மற்றும் வீட்டிற்கு நோ்மறையான சக்திகள் வரும்.
துளசி செடி

துளசி செடியானது ஒரு புனிதமான செடியாக சொல்லப்படுகிறது. துளசி செடியை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்குத் திசையில் இருக்கும் பால்கனி அல்லது சன்னல்களில் வைத்தால் நன்மைகள் உண்டாகும்.

மேலும், துளசி செடியின் கீழ் தினமும் விளக்கு ஏற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழுமையும் நிரந்தரமாக இருக்கும். எனினும் துளசியை வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்கூடாது.

மறக்காமல் இதையும் படியுங்க  2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை
Shares