நமது உடல் வெவ்வேறு காலநிலைகளுக்கு ஏற்ப வினைபுரியக்கூடியவை. அதில் குளிர்காலத்தில் காற்றின் நிலை காரணமாக உடல் வறட்சி மற்றும் ஈரப்பதத்தை இழக்கின்றன. இப்படி குளிர்காலத்தில் வீசும் வறண்ட காற்றின் காரணமாக, உடல் வினைபுரியும் ஒரு வழி சருமம் மற்றும் தலைச்சருமம் இரண்டும் வறட்சி அடைவது.
அதில் சரும வறட்சி மற்றும் பொடுகுத் தொல்லை இரண்டும் தான் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளாகும்.இவற்றில் பொடுகு உச்சந்தலையில் கடுமையான அரிப்பை உண்டாக்கும். இப்படி செதில்செதிலாக உச்சந்தலையில் இருந்து சருமத் துகள்கள் உடுத்தியுள்ள உடைகளில் உதிர்ந்திருப்பதைக் காணும் போது பலரது மனம் கஷ்டப்படலாம்.
வறண்ட காற்று பொடுகுக்கான அடிப்படை காரணியாக இருக்கும் போது, நாம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளால் அந்த பொடுகு மோசமாவதோடு, எளிதில் போகாதவாறு செய்துவிடும்.
கீழே ஒருவரது எந்த செயல்கள் பொடுகு நிலைமையை மோசமாக்கும் என கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து அந்த செயல்களைத் தவிர்த்து பொடுகில் இருந்து விடுபடுங்கள்.