jaffna7news

no 1 tamil news site

Health

மா.ர்பகங்களுக்கு அடியில் கருமையாக உள்ளதா?அப்போ இதை செய்யுங்கோ..

நம் உடலின் குறிப்பிட்ட பகுதி மற்ற பகுதிகளை விட சற்று கருமையாக இருக்கும். அதில் கை, கால்களை எடுத்துக் கொண்டால், சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கம் தான் காரணம்.அதுவே உடலின் சில பகுதிகளான அக்குள், மார்பகங்களுக்கு அடிப்பகுதி, கழுத்து போன்றவையும் கருமையாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் மடிப்புக்கள், உராய்வு, அதிகளவு வியர்வை வெளியேறுவது மற்றும் வேறுசில காரணங்களாக இருக்கும்.

இப்போது நாம் பார்க்கப் போவது, மார்பகங்களின் அடிப்பகுதியில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கையான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, கருமையை நீக்குங்கள்.

சோள மாவு
ஈரப்பதமான பகுதியில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். ஆனால் சோள மாவு அதிகப்படியான ஈரப்பசையை உறிஞ்சி, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். எனவே முதலில் மார்பகங்களின் அடிப்பகுதியை நீரால் கழுவி, துணியால் துடைத்துவிட்டு, சோள மாவை அப்பகுதியில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவில் நீரில் கலந்து எடுத்து, காட்டன் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வேகமாக கருமையைப் போக்கலாம்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மார்பகங்களுக்கு அடியில் தடவி, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் மார்பகங்களுக்கு அடியில் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, இறந்த செல்களும் நீக்கப்படும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கடுமையான கறைகளையும் போக்க வல்லது. அதிலும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதில், இதற்கு இணை வேறு எதுவும் இருக்காது. அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பால்
பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது ப்ளீச்சிங் தன்மைக் கொண்டது. ஆகவே பாலை காட்டனில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் ஏஜென்ட், சரும கருமையைப் போக்கக்கூடியது. அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து மார்பகங்களின் அடியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், எப்பேற்பட்ட கருமையும் மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares