பாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொதுவான பிரச்சனை மற்றும் இது அனைத்து வயதினரும் சந்திக்கும் பிரச்சனையும் கூட. இந்த எரிச்சல் உணர்வானது மிதமானது முதல் தீவிரமானது வரை என இருக்கும். இப்படி பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்பு அல்லது கோளாறுகள் காரணமாக இருக்கலாம்.
சில சமயங்களில் இந்த பிரச்சனை சர்க்கரை நோய், நாள்பட்ட குடிப்பழக்கம் மற்றும் குறிப்பிட்ட டாக்ஸின்களின் தாக்கம் போன்றவற்றால் கூட ஏற்படலாம். அதோடு பி வைட்டமின், ஃபோலிக் அமிலம், தையமின் அல்லது கால்சியம் குறைபாடுகள், காயங்கள், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், புற வாஸ்குலர் நோய்கள் போன்றவற்றாலும் பாதங்களில் எரிச்சலை சந்திக்கலாம்.
ஒருவரது பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால், அவர்களது பாதங்கள் வீங்கியோ, சிவந்தோ, தோல் உரிந்தோ, சரும நிறம் சற்று மாறுபட்டோ, தாங்க முடியாத எரிச்சலையோ சந்திக்க நேரிடும். இப்பிரச்சனையில் இருந்து விடுபட, ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. ஒருவேளை உங்களால் தாங்க முடியாத அளவில் எரிச்சல் உணர்வை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சரி, இப்போது பாதத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும் சில எளிய வழிகளைக் காண்போம். அதைப் படித்து பின்பற்றி, எரிச்சல் உணர்வில் இருந்து விடுபடுங்கள்.