“வலி”- நாம் பிறக்கும் போதும் நமது உயிரை விடும் போதும் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஒரு வித உணர்வை தருவதே. வலி உடல் அளவிலும் உளவியல் ரீதியாகவும் மாறுபடும். ஆனால், அதன் உணர்வு ஏனோ ஒன்றுதான். உடல் அளவில் ஏற்பட கூடிய வலிகளுக்கு மருந்துகள் கண்டறிய முடியும்.
ஆனால், உளவியல் சார்ந்த வலிகளை குணப்படுத்த நாம் தான் பக்குவமாக கையாள வேண்டும். உடலில் ஒரு சில இடங்களில் வலி ஏற்பட்டால் மோசமான விளைவை கூட தருமாம். எந்தெந்த இடங்களில் வலி ஏற்பட்டால் பேராபத்தை தரும் என்பதை இனி அறிவோம்.
வயதானவர்கள் மட்டுமல்லாது இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி வாட்டி வதைக்கிறது. இதற்குக் காரணம் ஓய்வற்ற பணிச்சூழல்தான். 50 வயதிற்கு மேல் வரவேண்டிய மூட்டுவலி பிரச்சினை இன்றைக்கு 30 வயதிற்கு மேலேயே எட்டிப்பார்க்கிறது. இதனை தவிர்க்க வீட்டில் உள்ள பொருட்களைக்கொண்டு நிவாரணம் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
குளிர் காலத்தில் மணிக்கட்டு, கை விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மணிக்கட்டு, விரல்களுக்கு அதிகம் வேலை கொடுப்பது, காயம் காரணமாக வலி ஏற்படலாம். சாதாரண மூட்டு பிரச்னைகூட பனிக்காலத்தில் அதிகரிக்கும். வலிகளையும் ஏற்படுத்தும். அதற்கான பாதுகாப்பு முறை மூலம் பனிக்கால மூட்டு வலியை தவிர்க்க முடியும்.
கால்களில் தசைப்பிடிப்பு, தசைகள் எலும்புகளு டன் இணையும் பகுதிகளில் தொடு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகளவில் வருகிறது. ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது.அதேபோல முதுகுவலி இடுப்பு/கை/கால் வலி அனைத்தையும் குணமாக்கும் மூலிகை தைலம் தயாரிப்பது எப்படி என்றுதான் பார்க்க போகிறோம்