உடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது, ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதுவே எலும்பு தேய்மானத்திற்கும் முக்கிய காரணம் ஆகும்.
உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. வயது மற்றும் உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு, சரியான உணவு முறையை கடைபிடித்தால் எலும்பு தேய்மானத்தை குணப்படுத்த முடியும்.
எலும்பு தேய்மானம் அறிகுறி மற்றும் அதன் காரணங்கள் என்ன?
பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதாவது பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், புகைபிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் எடை அதிகம் இருத்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.
சரி வாருங்கள் எலும்பு தேய்மானமா இடுப்பு வலி மூட்டு வலி கழுத்துவலி தாங்க முடியலயா அதற்கான அருமையான மருத்துவ பதிவை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்